Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 02 மார்ச் (ஹி.ச.)
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,
பெரம்பலூர் அருகே பாடலூர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பஞ்சராகி நின்ற பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை தேவிப்பிரியாவின்(43) கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், கார் டிரைவர் முத்து கணேஷ்(40), சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உதவியாளர் திவாகர்(36), படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தன் கண் முன்னே நிகழ்ந்த சாலை விபத்தில் டிரைவர் பலியாகி, உதவியாளர் படுகாயம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக சீரியல் நடிகை தேவிப்பிரியா உயிர் தப்பினார்.
இது குறித்து பாடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN