பைக் டாக்ஸியை தடை செய்ய கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம், 02 மார்ச் (ஹி.ச.) உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் அங்கு வாடகை வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்
Ramnad Collectorate Office


ராமநாதபுரம், 02 மார்ச் (ஹி.ச.)

உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் தினந்தோறும் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் அங்கு வாடகை வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கான பைக் டாக்ஸிகள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பைக் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ராமேஸ்வரத்தில் 800-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது பைக் டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சட்டவிரோத பைக் பாக்சியை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ராமேஸ்வரத்தில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

அதனால் ராமேஸ்வரத்தில் இன்று ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை . அதனைத் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து ராமேஸ்வரத்தில் பைக் டாக்ஸியை தடை செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN