சவுதி மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி தமிழ்நாடு அரசிடம் உதவி கேட்டுள்ளதாக வெளிநாடு நலத்துறை தகவல்
தமிழ்நாடு, 02 மார்ச் (ஹி.ச.) ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, இந்த ஆண்டு அதேபோல புனித பயணம் மேற்கொண்ட பிறகு அங்கு மீண்டும் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். தமிழ்நாடு அரசின் புதிய தலைமை காஜியாக (Chie
ஸ்டாலின்


தமிழ்நாடு, 02 மார்ச் (ஹி.ச.)

ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி, இந்த ஆண்டு அதேபோல புனித பயணம் மேற்கொண்ட பிறகு அங்கு மீண்டும் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை காஜியாக (Chief Kazi) மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் அவர்கள் அக்டோபர் 17, 2025 முதல் தமிழ்நாடு அரசு நியமித்தது.

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி மெக்காவில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி- யை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் உள்ளார்.

தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

விமான சேவை தொடங்கியவுடன் பத்திரமாக தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பத்திரமாக அழைத்து வரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam