Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
இதற்கு முன்பு, அவர் பல மாவட்டங்களில் பொதுமக்களை சந்திக்கும் கூட்டங்களை நடத்தினார்.
கரூரில் நடந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு, அந்த பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டது.
இதன்படி, சமீபத்தில் சேலம் மற்றும் வேலூர் போன்ற இடங்களில் தேர்தல் பிரசாரமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை அவர் நடத்தினார்.
அடுத்ததாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். இதற்காக, வருகிற 4-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, இதற்கு முன் தஞ்சை மத்திய மாவட்ட த.வெ.க. செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
இந்த மனு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளுடன் போலீசார் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு தவெக கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
விஜய் தொடர்ந்து தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், தஞ்சை கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM