தேனீருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எறிந்தது
கள்ளக்குறிச்சி, 02 மார்ச் (ஹி.ச.) திருச்செங்கோட்டில் இருந்து 43 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்னைக்கு சென்றது. இந்த பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியைச் சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்த பேருந்து
தீ விபத்து


கள்ளக்குறிச்சி, 02 மார்ச் (ஹி.ச.)

திருச்செங்கோட்டில் இருந்து 43 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்னைக்கு சென்றது.

இந்த பேருந்தை தூத்துக்குடி மாவட்டம் எரல் பகுதியைச் சேர்ந்த சரவணன் (46) என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.

இந்த பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலை ஓரம் உள்ள தனியார் உணவகத்தில் தேநீருக்காக நிறுத்தப்பட்டது அப்போது

பேருந்தில் இருந்த பயணிகள்இறங்கி தேனீர் அருந்ததற்காக உணவகத்திற்கு

சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின்

பின்பகுதியில் இருந்து இருந்து புகை வந்தது பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து திடீரென தீ பற்றிய எரிந்து மள மளவெண கொழுந்து விட்டு எறிய தொடங்கின தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சடித்து தீயை அணைத்தனர்.

பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கி உணவகத்திற்கு சென்றதால் பெரும்

அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியா சொகுசு பேருந்து திடீரென தீ பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam