Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மார்ச் (ஹி.ச)
தஞ்சாவூர் அருகே செங்கிபட்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்று காலையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் தெரிவித்ததாவது,
செங்கிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களை அழைத்து வழிகாட்டு நெறிமுறைகளை சொல்லி உள்ளனர்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையினர் சொல்லி உள்ளனர்.
கூட்டம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்ய உள்ளீர்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விளக்கம் கேட்டனர்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் சிறு தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை திருத்திக் கொண்டு இந்த கூட்டம் நடத்தப்படும்.
14 ஏக்கர் பரப்பளவில் நிகழ்ச்சி நடைபெற உள்ள,
இடம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மார்ச் 4ஆம் தேதி காலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வருபவர்களுக்கு 25,000 வாட்டர் கேன்கள் கொடுக்கப்பட உள்ளது. ஸ்னாக்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
விஜய் அவர்கள் திருச்சியில் இருந்து வர உள்ளார் அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர்.
தனியார் பாதுகாவலர்கள் தன்னார்வலர்கள் இங்கு வரும் நபர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் மருத்துவ முகாம்களில் பணியாற்ற உள்ளனர்.
30 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்.
தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ