Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 02 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பிடிபட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் போலீசார் அழித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதிகபடியாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பிடிபட்ட 12 வழக்குகளில் (1500) ஒன்றரை டன் குட்கா பான் மசாலா மற்றும் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2025ம் ஆண்டில் 8 வழக்குகளில் பிடிபட்ட ஒரு டன் (1000) அளவுள்ள பான் மசாலா மற்றும் உட்கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பிடிபட்ட அரை டன் அளவுள்ள குட்கா பான் மசாலாக்கள் என மொத்தமாக 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் பிடிப்பட்ட மூன்று டன் எடையுள்ள குட்கா பான் மசாலாக்களை இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதியில் பள்ளம்
தோண்டி ப்னாயில் போட்டு அழிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் ப்ரனித், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராவிந்தர குமார் குப்தா, விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அரகண்டநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய்த்துறையினர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN