+2 தேர்வு எழுதச் சென்ற மாணவி மீது அரசு பேருந்து மோதி விபத்து - மாணவி உயிரிழப்பு
விருதுநகர், 02 மார்ச் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி, மதுரை நிர்மலா பள்ளியில் +2 படித்து வந்தார். இன்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை எழுதுவதற்காக தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஆவியூரில் இருந்து தேர்வு மையத்துக்
Death


விருதுநகர், 02 மார்ச் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்த துர்கா தேவி, மதுரை நிர்மலா பள்ளியில் +2 படித்து வந்தார். இன்று நடைபெற்ற +2 பொதுத்தேர்வை எழுதுவதற்காக தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஆவியூரில் இருந்து தேர்வு மையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வலையன்குளம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மாணவி பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசு பேருந்து மாணவி மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

+2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி மீது அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN