ஒயின் ஷாப்பில் குடிமகன்கள் இருவருக்கிடையே மோதல் - தடுக்க வந்த உதவி ஆய்வாளருக்கு அடி உதை!
சென்னை, 02 மார்ச் (ஹி.ச.) சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பாம்பே ஓட்டல் அருகே உள்ள மதுபான கடையில் குடிமகன்கள் மூன்று பேர் சண்டையிட்டு கொண்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் தன
தாக்குதல்


சென்னை, 02 மார்ச் (ஹி.ச.)

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பாம்பே ஓட்டல் அருகே உள்ள மதுபான கடையில் குடிமகன்கள் மூன்று பேர் சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் தனசேகர் என்பவர் சண்டையிட்டுக் கொண்ட மூவரையும் தடுக்க சென்றபோது குடிமகன்கள் சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் தானசேகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அவர் நிலைக்குலைந்த நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இரவு நேரங்களிலும் கள்ளசந்தையில் இங்கு மதுவிற்பனை நடைப்பெறுவதாகவும் மதுபோதையில் இது போல தகராறில் ஈடுப்படுவதாகவும் அடிக்கடி இந்த மது கடையில் சண்டைகள் அதிகம் நடைபெறுவதாகவும் இரவு நேரத்தில் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் உள்ளது,

குடிமகன்களின் சண்டையை தடுக்கச் சென்ற உதவி ஆய்வாளருக்கு அடி உதை உதைத்த குடிமகனின் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் உதவி ஆய்வாளரை போதை ஆசாமிகள் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam