மின் திருட்டு சம்பந்தமாக புகார் அளிக்கலாம் - தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவிப்பு
சென்னை, 02 மார்ச் (ஹி.ச) கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூ
complaint regarding electricity theft -


சென்னை, 02 மார்ச் (ஹி.ச)

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்க்குட்பட்ட சென்னை/வடக்கு, மற்றும் சென்னை/மையம் அதிகாரிகள் அடையார் கோட்டம் அடையாறு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 2 உயர் மதிப்புள்ள மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக ரூ. 12.39.426 /- 2 மின் இணைப்புக்கு இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.62,000/-செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

இது போன்ற மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b