Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 02 மார்ச் (ஹி.ச.)
கொடிக்காய்ப்புளி மரத்திலே பழுத்த நிலையில் காற்று மழை அதிகம் அடித்தாலும் கீழே விழாமல் தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனால் இந்த மரத்தினை உதிரா மரம் என அழைப்பர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் கொடிகாய்ப்புளிக்கு சீசன் ஆகும். கொடிக்காய்ப்புளி மரம் வறட்சியை தாங்கி வளரும். தற்போது சீசன் துவங்கியுள்ளது.
இதன் பழம், காய்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை. இதனை சாப்பிடுவதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்தியும், பெண்களுக்கான மாதவிடாய் சிக்கல், நீர்க்கடுப்பு, ஆஸ்துமா, அல்சர் போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்தது.
கொடிக்காய் மரங்களும் அழிந்து அரிதாகி வரும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை கொடிக்காய் சீசன் வரும். கொடிகாய்ப்புளி துவர்ப்பு, இனிப்பு கலந்து இருக்கும். சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதால் அனைவரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
விருதுநகர் அருகே தாதம்பட்டி பகுதியில் ஏராளமான விளைநிலங்களில் கொடிக்காய் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு கொடிக்காய் பழங்களை, விவசாயிகள் பறிப்பதற்காக தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 வரை சம்பளம் தருகின்றனர்.
தற்போது விளைச்சல் குறைவாக இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட கொடிக்காய் பழங்களை ஒரு கிலோ ரூ.200க்கு விவசாயிகள், வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
இந்தபழங்கள் விருதுநகரில் தேசபந்து மைதானம் உள்பட பல்வேறு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் கொடிக்காய் பழங்கள் ஒரு கிலோ ஒன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலை என்றாலும் கொடிக்காய் பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b