Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 02 மார்ச் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் ஆண்டுதோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைண தலங்களுடன் இணைந்து ஒருசேர மாசிமக பெருவிழா 10 நாள்கள் நடைபெறும்.
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணி சுவாமி கோயிலில் கடந்த 21 ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெற்றது. இன்று மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
சக்கரராஜா, விஜயவள்ளி தாயார், சுதர்சன வள்ளி தேரில் எழுந்தருளத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.
தொடர்ந்து இராஜகோபால சுவாமி ஆதிவராகப் பெருமாள் ஆகிய வைணவ தலங்களில் கட்டு தேரோட்டம் நடைபெற்றது.
Hindusthan Samachar / vidya.b