மத்திய அரசு பள்ளிகளில் பாலர் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.) மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பால்வாடிகா எனும் பாலர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (மார்ச் 20) முதல் தொடங்குகிறது. கேந்திரிய வித்யாலயா
Admissions for kindergarten classes


புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.)

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பால்வாடிகா எனும் பாலர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (மார்ச் 20) முதல் தொடங்குகிறது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பால்வதிகா

( Balvatika) எனப்படும் Pre-KG, LKG, UKG வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இவை குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பால்வதிகா-1 மற்றும் 2 வகுப்பு ஒரு பள்ளியில் மட்டும்தான் உள்ளது. பால்வதிகா -3 வகுப்பு 18 பள்ளிகளில் இருக்கிறது.

இந்தியா முழுவதும் 50 பள்ளிகளில் மட்டும்தான் பால்வதிகா-1 மற்றும் 2 வகுப்புகள் உள்ளன. 445 பள்ளிகளில் பால்வதிகா -3 வகுப்புகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் பால்வதிகா-1 மற்றும் 2 வகுப்பு ஒரு பள்ளியில் மட்டும்தான் உள்ளது. பால்வதிகா -3 வகுப்பு 18 பள்ளிகளில் இருக்கிறது.

குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் ஏப்ரல் 2-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு முடிந்ததும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு பாலர் வகுப்பில் சேர்க்கை வழங்கப்படும்.

குழந்தைகளின் சேர்க்கையை பொறுத்து 3 முறை பட்டியல் வெளியிடப்படும். மேலும், விபரங்களை https://rochännai.kvs.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

Hindusthan Samachar / vidya.b