Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 மார்ச் (ஹி.ச.)
2023-ம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது குறித்து உரையாற்றினார்.
இதனை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், எல்லா வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனுவை நீதிபதி விக்ரம்நாத், என்.வி.அஞ்சரியா ஆகியோர் அடங்கிய குழு நேற்று மீண்டும் விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் மனுதாரரான உதயநிதிக்கு எதிராக போபாலிலும் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கவனித்துவரும் நிலையில், அதற்குத் தகுந்த மாதிரி மனுவில் மாற்றம் செய்ய விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் வேண்டு கோள் வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், விசாரணையை நான்கு வாரங்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM