Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச)
ஜோலார்பேட்டை-தொட்டம்பட்டி இடையே தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி வரும் மார்ச் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரக்கோணம்- சேலம் மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் அன்றைய தினம்
(மார்ச் 24-ந் தேதி) இருமார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், கோவை- எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் 24-ந் தேதி இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ஈரோடு- ஜோலார்பேட்டை பயணிகள் ரெயிலும் இருமார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், கோவை- பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ், பெங்களூரு- கோவை உதய் எக்ஸ்பிரஸ் ஆகியவை 24-ந் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
மேலும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரும் 24-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, மாலை 4.15 மணிக்கு புறப்படும். இதேபோல், கோவையில் இருந்து 24-ந் தேதி பகல் 3.15 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு புறப்படும்.
என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b