ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்
சென்னை, 20 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை(மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் கன்னியாக
Chennai–Kanyakumari Special Train Service


சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை(மார்ச் 21) கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் கன்னியாகுமரி வரை சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் சேவை வழங்கப்படுகிறது. ரயில் எண் 06045 சென்னை எழும்பூரிலிருந்து இன்று

(மார்ச் 20) இரவு 11-45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

இதேபோல், ரயில் எண் 06046 கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 22 அன்று இரவு 11-25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11-15 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். இந்த சிறப்பு ரயிலில் 18 ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முக்கிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் போன்ற முக்கிய நிலையங்கள் இதில் அடங்கும்.

திரும்பும் பயணத்திலும் அதே நிலையங்கள் வழியாக ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b