மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு - தங்கி இருந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செங்கல்பட்டு, 20 மார்ச் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணியை முடித்து மறைமலைநகர் சிலப்பதிகாரம் தெருவில்
Ele


செங்கல்பட்டு, 20 மார்ச் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு பணியை முடித்து மறைமலைநகர் சிலப்பதிகாரம் தெருவில் தங்கி உள்ள இடத்திற்கு வந்தார்.

அறையில் சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதற்காக அறையின் அலுமினிய ஜன்னலானது மின் டிரான்ஸ்பார்மரில் சார்ந்திருந்தது.

தெரியாமல் தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.

அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மின்சாரத்தை துண்டித்து அறையில் சென்று பார்த்த போது அறையினுள் மின்சாரம் தாக்கி ராஜ்குமார் இறந்து கிடந்தார்.

பிரேதபரிசோனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ