யானை தாக்கி இருவர் படுகாயம் - 2 மணி நேரமாக பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி, 20 மார்ச் (ஹி.ச.) கிருஷ்ணகிரி அடுத்த கீழ்பூங்குர்த்தி கிராமத்தை சேர்ந்த கொண்டப்பன் மற்றும் கனகப்பன் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்கு சாலையோரம் நடந்து சென்ற போது யானை தாக்கியது. இதில் கொண்டப்பனுக்கு தலையில் பலத்த காயம், காலில் எலும
சாலை மறியல்


கிருஷ்ணகிரி, 20 மார்ச் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி அடுத்த கீழ்பூங்குர்த்தி கிராமத்தை சேர்ந்த கொண்டப்பன் மற்றும் கனகப்பன் ஆகிய இருவரும் டீ குடிப்பதற்கு சாலையோரம் நடந்து சென்ற போது யானை

தாக்கியது.

இதில் கொண்டப்பனுக்கு தலையில் பலத்த காயம், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கனகப்பன் லேசான காயம் அடைந்தார்.

இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் யானை அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய

நெடுஞ்சாலையில் சின்னமட்டாரப்பள்ளி என்ற பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு

உள்ளனர்.

இந்நிலையில், யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறை அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam