Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
சென்னை சவுக்கார்பேட்டையை சேர்ந்த தங்க நகை வியாபாரி ஒருவர் வாணியம்பாடி சென்று நகையை விற்று விட்டு மீதி நகை மற்றும் வசூலான பணத்துடன் பெங்களூரில் இருந்து சென்னை வரக்கூடிய டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு சென்னைவந்தார்.
அப்போது, பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர் பி எப் தேர்தல் சிறப்பு படையினர் நடத்திய சோதனையில். உரிய ஆவணம் இல்லாமல் 210 கிராம் எடை கொண்ட ரூ. 30 லட்சம் தங்க நகை மற்றும் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது.
மேலும், உள்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பணத்தை பறிமுதல் செய்த ஆர் பி எப் தேர்தல் சிறப்பு படையினர்,
வருமானவரித் துறை அதிகாரிகள்
வசம் ஒப்படைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam