Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 20 மார்ச் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென நேற்று இரவு
இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல்
நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த
நெல்மணிகள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 5000 நெல் மூட்டைகளுக்கு மேல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்
மேல் கூரை அமைத்து
நெல் மூட்டைகளை பாதுகாத்திட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam