Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தரைத்தளத்தில் அமலாக்கத்துறை விசாரணையும் முதல் தளத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையும் நடைபெற்றது மறந்து விட்டாரா நேரு
செந்தில் பாலாஜி போல
கே.என்.நேருவும் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இருட்டில் சென்றால் பயம் ஏற்படும் என்பதற்கு போல பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சீண்டுவதற்கு முன்பாக தங்கள் முதுகை திமுக பார்க்க வேண்டும்.
சென்னையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம் உரிய நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ