பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 1-ம் தேதி தென்காசியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி, 20 மார்ச் (ஹி.ச.) பங்குனி உத்திர திருவிழா முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஏப்ரல் 1-ம் தேதி வரும் பங்குனி உத்திர திருவிழாவைக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர்
Local Holiday in Tenkasi


தென்காசி, 20 மார்ச் (ஹி.ச.)

பங்குனி உத்திர திருவிழா முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் ஏப்ரல் 1-ம் தேதி வரும் பங்குனி உத்திர திருவிழாவைக் கொண்டாடும் வகையில் அன்றைய தினம் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறை தினத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவசர காலப் பணிகளுக்காகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் முக்கிய அரசு அலுவலகங்கள் இயங்கும்.

மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் அரசுத் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 11ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b