பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும் - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 20 மார்ச் (ஹி.ச) மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் அயனாவரம் தந்தை பெரியார் நகர் (கோபி கிருஷ்ணா திரையரங்கம் அருகில்) தேர்தல் பணிமனையை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சரு
Sekar babu


சென்னை, 20 மார்ச் (ஹி.ச)

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில் அயனாவரம் தந்தை பெரியார் நகர் (கோபி கிருஷ்ணா திரையரங்கம் அருகில்) தேர்தல் பணிமனையை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் , தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம்,மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிகட்சி நிர்வாகிகள் திமுக மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது,

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் , தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆலோசனைக்கூட்டங்கள் பாகமுகவர்கள் கூட்டம் என நடக்கிறது இன்று தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது வில்லிவாக்கத்தில் இவ்வாறு தொடர்ச்சியாக தேர்தல் பணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுப்பட்டுள்ளோம்.

வில்லிவாக்கத்தில் 255 பாகங்க ஒரு இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர் இதில் பெண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.

இங்கு திமுகவிற்கு சாதகமான தொகுதி, வில்லிவாக்கம் தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் ஒரு முறையை தவிர அனைத்து முறையும் திமுக தான் வென்றுள்ளது.

சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தேர்தல் பணி என அனைத்தையும் இங்கிருந்து தான் துவங்குகிறோம்.வெற்றியினையும் இங்கிருந்து துவங்குவோம் என்று உறுதியோடு சொல்கிறோம்.

பலர் அதிகார ஆசையோடு மமதையோடு எதை வேண்டுமானால் எதை கொடுத்தும் வாங்கி விடாலாம் என சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால் இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அனைவரையும் மதிக்கவேண்டும் இவர்களுகெல்லாம் தக்கபாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும்.

ஒரு காலத்தில் லீடர் லீடர் என்று கைக்கட்டிக்கொண்டி நின்றவர் இன்று எங்களுக்கு அறிவு பரிசோதனை செய்யவேண்டும் என்கிறார். முதலில் இவருக்கு தான் கீழ்பாக்கம் மனநல மையத்தில் பரிசோதனை செய்யவேண்டும்.

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவர் அவரை விமர்சிப்பவர்களை தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான்.

பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும் நாங்கள் யாரையும் சவலாக நினைக்கவில்லை எங்களுடைய கொள்கை கோட்பாடுகள் திட்டங்கள் மக்களோடு உள்ள தொடர்புகள் இவற்றை நம்பி தான் உள்ளோம் பேய் பிசாசினை பார்த்து பயப்படமாட்டோம்.மக்கள் சக்தி யார் பின்னால் இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டும்

கூவி கூவி அழைத்தாலும் கூட்டணிக்கு யாரும் வரவில்லை அவர்களுக்குஅரசியல் ஞானம் பெற்றவர் திமுக தலைவர். அரசியல் நாகரீகத்தோடு செல்பவர்களுக்கு நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை ஆனால் நாகரீகம் தெரியாவதற்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால் பயம் என்பார்கள் இந்த கத்துகுட்டிகளுக்கு எதாவது ஒரு விதத்தில் பதில் சொல்லிவிடவேண்டும்.

திமுக கூட்டணி உறுதியான வலுவான கூட்டணி, சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளை கடந்த முறையை விட கூடுதல் வாக்கு சதவீதத்தோடு கைப்பற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ