Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
சென்னை தியாகராய நகரில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது பேசிய அவர்,
தமிழக மக்களுக்கான நன்மை எதுவோ அதை முதலமைச்சர் செய்ய வேண்டும் , அதைவிட்டுவிட்டு இந்தி பற்றி மட்டுமே இன்னும் பேசிக் கொண்டிருக்க கூடாது.
மலையாளம் , தெலுங்கு என பன்மொழி பேசக்கூடிய மக்கள் தமிழகத்தில் 20-25 சதவீதம் பேர் உள்ளனர் .
அவர்களுடைய வாக்குகள் எல்லாம் தங்களுக்கு வேண்டாம் என முதலமைச்சர் கூறுகிறாரா..? இந்துக்கள் வாக்கு வேண்டாம் என்றும் முதலமைச்சர் கடந்த காலத்தில் கூறியது போல இப்போதும் கூறுகிறாரா..?
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடக்கிறது , அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி சொல்லுவது ஏன் என கேட்கிறீர்கள்..
டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் என்ன தவறு உள்ளது..?
இன்னும் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. எதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார் என முதலமைச்சருக்கு தெரியாது. அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறார்.
நாளை பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார் , தேசிய ஜடநாயக கூட்டணியில் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நாளை தொடங்கும் .
தமிழகத்தில் வைத்துதான் தொகுதி எண்ணிக்கை உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்துகிறோம்
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் பயத்தில் எது எதுவோ சொல்கிறார். திமுக கூட்டணியில் மட்டும் தொகுதி உடன்பாடுகள் முடிந்துவிட்டதா என்ன..?
அதிமுக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை டெல்லியில் பேசினாலும் என்ன தவறு என்றுதான் நான் கேட்டேன். பேச்சுவார்த்தை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியளவில் பாஜகவும் , தமிழகத்தில் அதிமுகவும் தலைமை.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்று கேட்கிறீர்கள்
பேச்சுவார்த்தை எங்கு நடக்கும் என நாளை வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ