Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 20 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் என்பவர் நீலகிரிக்கு சுற்றுலா வந்தார்.
உதகையில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சி
முனையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார் .
அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று செல்பி எடுக்க முயன்ற போது தவறி
150 அடி பள்ளத்தில் சிவகுருநாதன் விழுந்தார்.
இதனால் அவருடன் சென்றவர்களும்
ஊசிமலை காட்சி முனையில் இருந்த சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர்
போலீசார் சிவகுரு நாதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிவகுரு நாதன் விழுந்த இடம் மிகவும் பள்ளத்தாக்கு என்பதால் தீயணைப்புத்
துறையினர் மற்றும் வனத்துறையினர் அவரை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால்
பள்ளத்திலிருந்து அவரை மேலே கொண்டு வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இரவாகியும் அடர்ந்த வனப்பகுதியில் நெருப்பை மூட்டி வனத்துறையினரும்
சிவகுரு நாதனை மீட்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் இருந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பலத்த பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் சிவகுரு நாதனுக்கு போர்வைகள் தேவையான உணவு போன்றவற்றை வனத்துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
அவருக்கு பாதுகாப்பாக அவரின் அருகில் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் உள்ளனர்.
ராணுவ வீரர்கள் வந்தவுடன் சிவகுருநாதனை மீட்கும் பணிகள் இரவோடு இரவாக
நடைபெற்றது.
அதிகாலை 3:30 மணியளவில் சிவகுருநாதனை ராணுவ வீரர்கள் கயிறு கட்டி
மீட்டனர்.
மேலும் அவரை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam