Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று விகிதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த விலை நிர்ணயமானது, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
இன்றைய நிலவரப்படி,
சென்னையில் இன்று (20.03.2026 - வெள்ளிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவானது (சிஎன்ஜி), ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகள் அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டவை.
Hindusthan Samachar / JANAKI RAM