Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 20 மார்ச் (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் வாரச் சந்தை மைதானத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாள் அன்று ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை 21-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால்கொண்டாடப்பட உள்ள ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடுகள் என 4,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள் போட்டா போட்டி கொண்டு சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
மேலும் ஆடுகளை வாங்குவதற்காக ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் சந்தையில் மள.. மள.. மளவென.. குவிந்தனர்.
ஆனாலும் ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டதால் எடைக்கு ஏற்ப 1 ஆடு ரூபாய் 7,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 30,000 வரை விலைபோனது.
மேலும் இதுகுறித்து ஆட்டு வியாபாரிகளிடம் கேட்கையில்,
ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதால் சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வரத்து குறைவாக காணப்பட்டு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆனாலும் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற வார சந்தையில் அதிகாலை முதலே 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு ஆடுகளின் விலை விற்பனை போகாததால் வியாபாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
குறிப்பாக தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் அறிவித்துள்ளதால் வியாபாரிகள் ரூபாய் 50,000 வரை எடுத்து செல்லப்பட வேண்டும், இதனால் ஆடுகளின் வரத்து குறைவாக காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam