Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
ரம்ஜான் பண்டிகை காரணமாக டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும்.
அதாவது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டிக்கெட் முன் பதிவு மையம் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM