Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்பெயின், 20 மார்ச் (ஹி.ச.)
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏறத்தாழ நான்கு வருடங்களாக போர் நடந்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவாக இரு தரப்பிலும் எண்ணற்ற போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடம், உடைமைகள் முதலியவற்றை இழந்து பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் இரண்டு தேசங்களும் ஒன்றுக்கொன்று தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவுடன் போர் செய்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு கிட்டத்தட்ட ரூ.9000 கோடி (100 கோடி யூரோ) மதிப்புடைய புதிய ராணுவ உதவிகளை தர ஐரோப்பிய நாடான ஸ்பெயின் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவருக்கும் மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட ஆயுதங்கள் உக்ரைனுக்கு அளிக்கப்படவுள்ளன.
போர் முடியும் வரை உக்ரைனுக்கு எங்களுடைய ஆதரவு தொடரும் என்று ஸ்பெயின் உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM