விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு திடீர் உடல்நலக் குறைவு
தூத்துக்குடி, 20 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த பத்தாம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வ
Dharmapuri Muneeswaran


தூத்துக்குடி, 20 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த பத்தாம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்ற பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 10 தனிப் படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் ஒன்பது நாட்கள் கழித்து இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீசார் நேற்று மார்ச் 19 ஆம் தேதி கைது செய்தனர்.

ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், நள்ளிரவில் திடீரென அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதை அடுத்து தர்ம முனீஸ்வரன் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN