பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சி-பாலக்காடு ரெயில் சேவை மாற்றம்
திருப்பூர், 20 மார்ச் (ஹி.ச.) கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து,திருப்பூர் ரெயில்வே கோட்ட அதி
Trichy-Palakkad Train Service Rescheduled T


திருப்பூர், 20 மார்ச் (ஹி.ச.)

கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை எளிதாக்கும் வகையில், திருச்சி-பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து,திருப்பூர் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,

திருச்சி-பாலக்காடு (வண்டி எண்.168439 எக்ஸ்பிரஸ் நாளை (மார்ச் 21) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 22) ஆகிய 2 நாட்களில் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

பணிகள் முடிந்தவுடன் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயிலாக பாலக்காடுக்கு இயக்கப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b