Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
சென்னை அடையாறு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு டிடிவி தினகரன் புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க தான் டெல்லி செல்கிறேன் என்றும், இந்த சந்திப்பு எல்லாம் சுமூகமாக நடைபெறும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் தான் போட்டியிடும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், எத்தனை தொகுதிகள் கேட்க வேண்டும் என்பது குறித்து இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் நேரடியாக தெரிவிப்பேன் என்றும் கூறினார்.
தாங்கள் கேட்கும் தொகுதிகள் குறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் யூகங்களே என்றும், அதற்கு தற்போது பதில் அளிக்க முடியாது என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ