Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செங்கோடு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறக்கும் படை பறிமுதல் செய்ததாக சொல்லி சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் பொய் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ராதா ஆர்த்தோ மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் கண்ணன்,
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே ராதா மெடிக்கல் சென்டர் நிறுவனத்துடன் இணைந்து தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மருத்துவ முகாமை நடத்தியதாக தெரிவித்தார்
அந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், ஊட்டச்சத்து டானிக் ஆகியவை அருண்ராஜ் சார்பில் வழங்கப்பட்டது எனக் கூறிய மருத்துவர் கண்ணன், நல்ல எண்ணத்தில் மக்களுக்கு வழங்கியதை தேர்தலுக்காக கொடுத்ததாக திரித்து பொய்யாக பரப்பி வருவதாக கூறினார்.
அதே மாதிரி, பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி, கோலப் போட்டிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது போக எஞ்சிய மீதப் பாத்திரங்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் வீட்டில் வைக்கைப்பட்டிருந்த நிலையில், அந்த பாத்திரத்தை பறிமுதல் செய்ததை பூதாகரமாக்கி பரப்பி வருவதாக விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ