Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
கூட்டணி கட்சிகளை எப்படியாவது தக்க வைக்க திமுக தரப்பில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கூட்டணி தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி ஏற்கனவே திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது.
அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டமானது சென்னையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் வரும் தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்திருந்தார். இல்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தி.மு.க.விடமிருந்து கூடுதல் இடங்களை ஒதுக்குவதாக எந்த பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் வெளியேறுவதாகவும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாகத் தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நாளை மறுதினம் (22.03.2026) அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வேல்முருகன் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 20221ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வேல்முருகன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வட மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சி வாக்கு வங்கி உள்ள ஒரு சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b