அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்- கூடுதல் தொகுதிகளை கேட்டு விடாப்பிடி!
புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அண்மையில் அதிமுக பொதுச்
டிடிவி தினகரன்


அமித்ஷா


புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அண்மையில் அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சந்தித்து பேசி வருகிறார்.

டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் வைத்து சந்திப்பு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட இருக்கும் தொகுதி தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அ.ம.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

நேற்று முன் தினம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சவை சந்தித்து தொகுதி உடன்பாடு உள்ளிட்ட விவகாரங்களை ஆலோசித்த நிலையில், டி.டி.வி.தினகரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam