Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.)
டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 49-வது கூட்டமானது 25-ந்தேதி நடைபெற உள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் நாற்பத்தி ஒன்பதாவது கூட்டமானது டெல்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில், எதிர்வரும் 25-ந்தேதி அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவரான எஸ்.கே.ஹல்தார் அவர்கள் தலைமை வகிக்கவுள்ளார்.
மேலும், காவிரி நதியுடன் தொடர்புடைய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு இந்த கூட்டம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM