சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சிக்கிய புரோட்டீன் பவுடர் பாக்ஸ்கள், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்
சென்னை, 21 மார்ச் (ஹி.ச.) சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் அய்யப்பன் கோவில் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலையில் சோதனை நடத்தினர். அப்போது கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர். காருக்குள், உடற்பயிற்சிக்கு
Whey


சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் அய்யப்பன் கோவில் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலையில் சோதனை நடத்தினர். அப்போது கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.

காருக்குள், உடற்பயிற்சிக்கு தேவையான புரோட்டின் பவுடர்கள் இருந்தது. 16 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதனால் தேர்தல் பறக்கும் படையினர் அதனை கைப்பற்றி மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை கொண்டு சென்ற பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட முசிறி சுப்பிரமணியம் தெருவில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது ஆம்னி வேனை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது காருக்குள் தடைசெய்யப்பட்ட போதைப்பொள் ஹான்ஸ், மற்றும் கூல்லிப், பாக்கு பாக்கெட்டுகள் என 150 பாக்கெட்டுகள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிறகு மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் ஆம்னி வேனில் இருந்த சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மயிலாப்பூரைச் சேர்ந்த சிவா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் பரோட்டா மாஸ்டராக ஓட்டலில் வேலை செய்து வருவது தெரிய வந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ