Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் ( ஹி.ச.)
தமிழகத்தின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் திராவிட மாடல் தொடர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை 'ஸ்டாலின் ஸ்டேட்மென்ட்' என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன்.
இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு ஓட்டுப்போட வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பால் உற்பத்தி உயர்வு மற்றும் மீனவர்களின் வாழ்வு மேம்பாட்டிற்கான திட்டங்கள்.
நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்.
சிறு, குறு நடுத்தரத் தொழில்துறை சார்பில் 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்பான நவீன சாலை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை சார்பில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறப்பான திட்டங்கள்.
வீட்டு வசதித் துறை சார்பில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேவைப்படும் அனைவருக்கும் போதுமான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயச் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், லைப்ரரி 5.0, மற்றும் வெற்றிப்பள்ளிகள் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படும்.
உயர்கல்வித் துறை சார்பில் நான் முதல்வன் 2.0 திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள்.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b