கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் என மோசடி - சென்னை அண்ணா சாலை உள்ள நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு
சென்னை, 21 மார்ச் (ஹி.ச) அதிக வட்டி தருவதாகவும் கூறி தங்கம் கிரிப்டோ கரன்சி ஆயில் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டி தருவதாகவும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்த்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது ஏற்கனவே ஆருத்ரா கோல
Crypto


சென்னை, 21 மார்ச் (ஹி.ச)

அதிக வட்டி தருவதாகவும் கூறி தங்கம் கிரிப்டோ கரன்சி ஆயில் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டி தருவதாகவும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்த்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது

ஏற்கனவே ஆருத்ரா கோல்ட் மோசடி, நியோமேக்ஸ், என எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை என்பது மேற்கொண்டு வருகிறது சமீப காலமாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

சென்னையில் TFT Block Chain Services Private Limited (Tycoon Fintech) 6 Crypto currency ல் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நிலையான வருமானம் பெறலாம் என ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடைய சுமார் ரூ.20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை முதலீடு பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மாதவட்டிப்பணமும் தராமல் முதலீட்டுப்பணத்தையும் தராமல் ஏமாற்றியது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் இந்த நிறுவனம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது அதற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டபோது அந்த நிறுவனமும் நிறுவன இயக்குனர்களும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரிசர்வ் வங்கி , கம்பெனிகள் பதிவுத்துறை இடம் புகார் அளித்தது புகாரின் அடிப்படையில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் நிறுவனம் தரப்பிலும் இயக்குனர்கள் தரப்பிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை அந்த நிறுவன கம்பெனி சட்டத்தை மீறி சிறு நிறுவனம் ஆனது குறைந்த முதலீடுகள் பெறாமல் அதிக முதலீடுகளைப் பெற்று அதற்கான முறையான அனுமதிகளையும் பெறாமல் மற்றும் கணக்குகளையும் ஆவணங்களையும் வைத்துக் கொள்ளாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கம்பெனி பதிவுத்துறை tft பிளாக் செயின் சர்வீஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்மந்தமாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் இந்நிறுவனத்தின் மீதும் இந்நிறுவனத்தின் இயக்குநர் ஜான் சார்லஸ் ரட்சகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனமானது கீழ் கீழ்க்கண்ட முகவரிகளில் இயங்கி வந்ததாக தெரிய வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் ஏழாவது தளத்திலும், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பிரகாஷ் நகர் என்ற இடத்திலும், மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலை தனியார் வணிக வளாகத்திலும் திரு வி க நகர் தனியார் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதிகளும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் மற்றும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அசோக் நகர், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், சென்னை-83 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமறைவான நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Hindusthan Samachar / P YUVARAJ