ராஜஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
ஜெய்ப்பூர், 21 மார்ச் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உடனடியாக ஆய்வுப் பணிகளை தொடங்குமாறு முதலமைச்சர் பஜன்லால் சர்மா இன்று உத்தரவிட்டார். பயிர் சேதம் தொடர்பா
ராஜஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு


ஜெய்ப்பூர், 21 மார்ச் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்காக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உடனடியாக ஆய்வுப் பணிகளை தொடங்குமாறு முதலமைச்சர் பஜன்லால் சர்மா இன்று உத்தரவிட்டார்.

பயிர் சேதம் தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் சர்மா கூறியதாவது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பட்ட சேதத்தை துல்லியமாக மதிப்பிட மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக கள ஆய்வுகளை மேற்கொண்டு, விரைவில் அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பொருளாதார அடித்தளம் விவசாயிகள் ஆவர். அவர்களின் நலனில் மாநில அரசு முழு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, அவர்களுக்கு துணையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் விரைவாகவும் போதுமான அளவிலும் நிவாரண உதவிகளை வழங்குவது அரசின் முன்னுரிமை. இதை உறுதிசெய்ய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM