கொள்முதல் செய்யப்பட்டும் மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகள் - கடலூர் மாவட்ட விவசாயிகள் கண்ணீர்
கடலூர், 21 மார்ச் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ம.கொத்தனூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் அறுவடை செய்யப்பட்ட குருவை மற்றும் சம்பா ந
நெல் மூட்டைகள்


கடலூர், 21 மார்ச் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ம.கொத்தனூர் கிராமத்தில் இயங்கி வரும்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் அறுவடை செய்யப்பட்ட குருவை மற்றும் சம்பா நெற்பயிர்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டு கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகளானது கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட

சுமார் 15,000 க்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் நெல் கொள்முதல் நிலையத்திலேயே கிடப்பில் போடப்பட்டதால், கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து தற்போது

வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிதாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு தங்கள் கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கொண்டுவர மிகவும் சிரமப்பட்டதாகவும் தற்போது நெல் மூட்டைகளை

அதிகாரிகள் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் காலம்

தாழ்த்தி வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam