மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வீட்டு உரிமையாளர் கைது
தெலுங்கானா, 21 மார்ச் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் மச்சிலிபட்டினம் மாவட்டம் நிஜாம் பேட்டை சேர்ந்த ரகு என்கிற பூசாரி. இவருக்கு சொந்தமான வீட்டில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியும் குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். சிறுமி அதே பகுதியில் உள்
கைது


தெலுங்கானா, 21 மார்ச் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் மச்சிலிபட்டினம் மாவட்டம் நிஜாம் பேட்டை சேர்ந்த ரகு என்கிற பூசாரி.

இவருக்கு சொந்தமான வீட்டில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியும் குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி இரவு சினிமாவுக்கு அழைத்துச் சென்றார்.

சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு வர தாமதமாகி விட்டதால் சிறுமியை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்தார்.

நள்ளிரவு சிறுமியை மிரட்டி பாலியல் அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை வன்கொடுமை செய்தார். இதேபோல் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் கர்ப்பம் அடைந்தார்.

இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ரகுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam