ஹூப்ளி - ராமேசுவரம் கோடை கால சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 21 மார்ச் (ஹி.ச) தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 தேர்வு அடுத்த வாரத்தில் நிறைவடைகிறது. ஏப்ரல் 2ம் வாரத்தில் பிற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன
Hubballi–Rameswaram Summer Special Train


சென்னை, 21 மார்ச் (ஹி.ச)

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 தேர்வு அடுத்த வாரத்தில் நிறைவடைகிறது. ஏப்ரல் 2ம் வாரத்தில் பிற வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

இந்த நிலையில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக ஹூப்ளி -ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஹூப்ளி -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07355) அடுத்த மாதம் (ஏப்ரல்) 5, 12, 19, 26 மற்றும் மே 3,10,17,24,31 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை களில்) ஹூப்பள்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக ராமேசுவரம் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07356) வருகிற ஏப்ரல் 6,13,20,27 மற்றும் மே 4,11,18,25, ஜீன் 1 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b