Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 21 மார்ச் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகனந்தல் பகுதியில் உள்ள ஒரு குரூப் இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்வீட் ராக்கர்ஸ் என்ற குழுவாகவும், மற்றொரு தரப்பினர் ரோயிங் லயன்ஸ் என்ற ஒரு குழுவாகவும் இளைஞர்கள் அப்பகுதியில் செயல்பட்டு
வருகின்றனர்.
இவர்களுக்கிடையே யாருக்கு யார் அடிக்கடி கெத்தாக
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது இந்தப் பகுதியில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பது குறித்து அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
அந்த வகையில்
இந்தக் குழுவில் உள்ள பல்வேறு நபர்கள் மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் கெத்தாக ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் வடக்குநந்தல் பகுதியில் ஒருவரை ஒருவர் கடுமையாக கற்கள் கம்பிகள் கொண்டு பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கச்சராபாளையம் காவல்துறையினர்
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பரத், ஆகாஷ், பாலு, தரணி, கதிர், சூர்யா, தனுஷ், கோகுல், ஆகியோர் ஒரு தரப்பாகவும், பிரமேஷ், மணிகண்டன்
(பாமக நகர
செயலாளர்), கார்த்தி, பரத், விக்னேஷ், ஆனந்த், கோபால் ஆகியோர் ஒரு
தரப்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இதில் ஒரு தரப்பில் பிரமேஷ், கோபால் மற்றொரு தரப்பில் தரணி, கதிர், சூர்யா ஆகிய 5 பேரை கைது செய்து
உள்ளனர்.
இளைஞர்கள் அந்த பகுதியில் இரவு நேரத்தில் இதுபோன்று அடிக்கடி தகராறு ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam