பாசிசத்தை, பாயாசத்துடன் ஒப்பிடக்கூடிய விஜயின் அரசியல் ஞானத்தை பார்த்து உலகமே சிரிக்கிறது -  த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா
சென்னை, 21 மார்ச் (ஹி.ச.) இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொ
Jawahirulla


சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இந்த மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளிலிருந்து இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவர்.

இந்த ஆண்டு ரமலான் நோன்பு, கடந்த மாதம் 19 ஆம் தேதி

தொடங்கியது. 30 நாட்கள் நோன்பின் இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

அந்த வகையில், நோன்பு காலம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது..

அதன் வரிசையில் பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் ஈகைத்திருநாள் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.

இந்த சிறப்புக்கு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளென ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும் தொழுகைக்குப் பிறகு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஈகை பெருநாள் உரை நிகழ்த்தினார்..

கூட்டுத் தொழுகை முடிவடைந்ததும் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா,

தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ரமலான் மாதம் முழுவதும் இறைவனை வணங்குவது மட்டுமின்றி ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்களை வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்ந்தார்கள்.

நாட்டிலே சமூக நல்லிணக்கம் மக்களுக்கு மத்தியிலே ஒற்றுமை சமத்துவம் நீடித்து நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

எல்லோருக்கும் எல்லாம் அனைவருக்கும் சமூக நீதி அனைவருக்கும் நல்லிணக்கம் என்ற நல்லாட்சி தொடர்வதற்கும் இந்த இறைவனை இந்த தருணத்தில் பிரார்த்தித்தோம்.

அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்.

திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் என கையெழுத்தாகிவிட்டது. எந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை

மணப்பாறை, பாளையங்கோட்டை, திருச்சி கிழக்கு, ஆம்பூர், திருவாடானை தொகுதிகளில் போட்டியிட விருப்ப பட்டியல் கொடுத்துள்ளோம் என்றார்..

மேலும் பேசிய அவர் விஜயின் மதச்சார்பின்மையை அவருடைய வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பாசிசமா? பாயாசமா? என கேட்டவர்,

பாசிசம் எவ்வளவு கொடூரமானது. பாசிசம் இந்தியாவில் என்னென்ன கொடுமைகளை நடத்தி இருக்கிறது? பாபர் மசூதி அழிப்பு உட்பட இன்றைக்கும் பல பள்ளிவாசல்களை இடிப்பது தான் பாசிசம்.

அந்த பாசிசத்தை பாயாசத்துடன் ஒப்பிடக் கூடியவருடைய அரசியல் ஞானம் உலகமே சிரிக்கின்றது. அதை நம்பும் படியாக இல்லை.

விஜய் நம்பிக்கைக்கு உரியவராக தமிழ்நாடு மாநில அரசியலில் தென்படவில்லை என்று கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ