கரூர் அருகே காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு - வாங்கல் போலீசார் விசாரணை
கரூர், 21 மார்ச் (ஹி.ச.) கரூர் மாவட்டம் நெரூர் செல்லும் சாலையில் உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - சாந்தி தம்பதியினரின் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் இனியா, அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்
Vangal Police Station


கரூர், 21 மார்ச் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் நெரூர் செல்லும் சாலையில் உள்ள காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - சாந்தி தம்பதியினரின் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகள் இனியா, அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

கடந்த 19 ஆம் தேதி இரவு நேரம் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அடுத்த நாள் காலை எழுந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று தேடியும் எங்கும் கிடைக்காததால் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந் நிலையில், இன்று இனியாவின் வீட்டு அருகே உள்ள கிணற்றில் அவரது உடல் மிதந்த நிலையில் காணப்பட்டது.

இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது இதற்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து வாங்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN