Enter your Email Address to subscribe to our newsletters

ஆக்லாந்து, 21 மார்ச் (ஹி.ச.)
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று 3-வது டி20 ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீசத் தீர்மானித்தது.
இதன்படி, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே திணறினர். எந்த வீரரும் 30 ரன்களைக் கூட தொடவில்லை.
முடிவில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் ஜேமிசன், சாண்ட்னர், சியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் தொடங்கியது.
ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணி ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். டாம் லாதம் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 63 ரன்களும், கான்வே 39 ரன்களும் எடுத்தனர்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் எடுத்தது.
இதன் விளைவாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM