இஸ்லாமிய சகோதரர் சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துக்கள் - நயினார் நாகேந்திரன்
சென்னை, 21 மார்ச் (ஹி.ச) இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இன்று காலை நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந
இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் ரமலான் வாழ்த்து - நயினார் நாகேந்திரன்


சென்னை, 21 மார்ச் (ஹி.ச)

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் இன்று காலை நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

புனித ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

இந்த புனித மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தி, கருணை, பொறுமை, தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த மதிப்புகளை நமக்குள் மேலும் வலுப்படுத்தும் அருமையான காலமாகும்.

அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்து, மகிழ்ச்சி பெருகி, அன்பும் நிம்மதியும் என்றும் தங்கட்டும். சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வளர்ந்து, உங்கள் இல்லங்களில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த ரமலான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும்.

ரமலான் முபாரக்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b