Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.)
ஈத்-உல்-ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மக்களுக்கு தனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் சகோதரத்துவம் அனைவரிடமும் நிலைக்க வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
ஈத்-உல்-ஃபித்ர் நல்வாழ்த்துகள்.
இந்த புனித நாள் எங்கும் சகோதரத்துவத்தையும் கருணையையும் வலுப்படுத்தட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள்.
ஈத் முபாரக்!
என்று பதிவிட்டுள்ளார்.
இதனுடன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும் நாட்டின் மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தினருக்கும் ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM