Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி,21 மார்ச் (ஹி.ச.)
பாரதிய ஜனதா கட்சி இன்று புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பட்டியலை அறிவித்தது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க தேர்தல் குழு இன்று அறிவித்துள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலை, பா.ஜ.க.கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையில் கூடிய மத்திய தேர்தல் குழு (சிஇசி) இந்தப் பட்டியலை இறுதி செய்தது.
இதில்,பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:
மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் ஏ. நமச்சிவாயம் (மாநில உள்துறை அமைச்சர்)
ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் ராமலிங்கம் (புதுச்சேரி மாநில பாஜக தலைவர்)
முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஜான்குமார்
(தற்போதைய அமைச்சர்)
மணவெளி சட்டமன்ற தொகுதியில் ஆர். செல்வம்
(சட்டப்பேரவைத் தலைவர்)
திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் :
ராஜசேகரன்.
நிரவி திருப்பட்டணம் சட்டமன்ற தொகுதியில் :
மீனாட்சி சுந்தரம்.
மாஹே சட்டமன்ற
தொகுதியில் : கணேசன்.
ஊசுடு சட்டமன்ற தொகுதியில் :
தீப்பாய்ந்தான்.
காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் :
கல்யாணசுந்தரம்
(தற்போதைய எம்எல்ஏ)
மீதமுள்ள ஒரு தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே புதுச்சேரி மாநில அந்தஸ்து, புதிய கட்சியை கூட்டணியை சேர்க்க வேண்டாம் என்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடைபெற இருந்த தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை கூட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி புறக்கணித்திருந்தார்.
இது தொடர்பாக பாஜக தலைமையிடம் இருந்து, ரங்கசாமியை தொடர்பு கொண்டு சமாதானம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
என்பது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / Durai.J